முகப்பு /கோயம்புத்தூர் /

சுடுகாட்டில் கொட்டகை அமைத்து குடிபெயர முயன்ற நல்லூர்பாளையம் பெண்கள்..! ஷாக்கான அதிகாரிகள்..!

சுடுகாட்டில் கொட்டகை அமைத்து குடிபெயர முயன்ற நல்லூர்பாளையம் பெண்கள்..! ஷாக்கான அதிகாரிகள்..!

X
சுடுகாட்டில்

சுடுகாட்டில் கொட்டகை அமைத்து குடிபெயர முயன்ற நல்லூர்பாளையம் பெண்கள்

Women Protest in Kovai : கோவையை சேர்ந்த கிராம பெண்கள் அங்குள்ள மயானத்தில் கொட்டகை அமைத்து குடிபெயர முற்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்த வதம்பசேரி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரே வீட்டில் 2 முதல் 3 குடும்பங்கள் வரை வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று நல்லூர்பாளையம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆட்சியர் முதல், வட்டாட்சியர் வரை அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதனிடையே அந்த பகுதியில் மயானத்திற்காக 19 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. நல்லூர்பாளையத்தில் மயானத்திற்கு 3 ஏக்கர் நிலம் போதும் என்ற நிலையில், மீதமுள்ள நிலத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சுடுகாட்டில் கொட்டகை அமைத்து குடிபெயர முயன்ற நல்லூர்பாளையம் பெண்கள்

இதையும் படிங்க : எச்சரிக்கை..! கோடை சீசனுக்கு மாம்பழங்கள் வாங்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க..!

ஆனால், இதுவரை வருவாய்த்துறையினர் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள், மயானம் உள்ள இடத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அந்த நிலத்தை சுத்தம் செய்த பெண்கள் அங்கு கொட்டகை அமைத்து குடியேற முடிவெடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பெண்களின் இந்த நூதன போராட்டம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் துரிதமாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். திடீரென பெண்கள் மயானத்தில் குடியேற சென்றதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News