ஹோம் /கோயம்புத்தூர் /

என்னது கரண்ட் பில் ரூ.70 ஆயிரமா..? - ஷாக் ஆன கோவை தம்பதி.!

என்னது கரண்ட் பில் ரூ.70 ஆயிரமா..? - ஷாக் ஆன கோவை தம்பதி.!

X
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தம்பதி

Coimbatore Shocking current bill for couples | கோவை கரும்பு கடையை அடுத்த சாரமேடு பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியின் வீட்டின் மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையை சேர்ந்த ஒரு தம்பதியின் வீட்டுக்கு ஒரு மாத மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் வந்துள்ளதாகவும், அதனை தவணை முறையில் செலுத்தக்கோரி மின் வாரியம் நிர்ப்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

கோவை கரும்பு கடையை அடுத்த சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரபியா. இவர்களுக்கு சொந்தமாக கரும்புக்கடையில் வீடு உள்ளது. இவர்கள் குடும்பத்தில் மொத்தம் 4 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மின் கட்டணம் ரீடிங் எடுப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மின் அளவை குறித்து சென்று விட்டனர்.

அதன் பின்னர் முஸ்தபாவின் எண்ணுக்கு மின் கட்டணம் குறித்து குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த தம்பதிகள் இருவரும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களிடம் அதிகாரிகள் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டாம் ரூ.30 ஆயிரம் செலுத்தினால் போதும். அதுவும் வாரம் 6 ஆயிரம் கட்டுங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முஸ்தபா மற்றும் அவரது மனைவி ரபியா இருவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து ரபியா கூறுகையில், வீட்டிற்கு எப்படி மின் கட்டணமாக இவ்வளவு அதிகமாக வரும்? இவ்வளவு பெரிய தொகையை எங்களால் செலுத்த இயலாது என்று கூறினார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore, EB Bill, Local News