முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை கோனியம்மனை கும்பிட வந்த பக்தர்களுக்கு உதவிய இஸ்லாமியர்களால் நெகிழ்ச்சி!

கோவை கோனியம்மனை கும்பிட வந்த பக்தர்களுக்கு உதவிய இஸ்லாமியர்களால் நெகிழ்ச்சி!

X
பக்தர்களுக்கு

பக்தர்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள்

Coimbatore News : கோவை கோனியம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உதவியதால் நெகிழ்ச்சி ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையின் காவல் தெய்வம் என்று இந்துக்களால் அழைக்கப்படும் கடவுள் கோனியம்மன். ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் மாசி மாதம் பிரம்மாண்டமான தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் டவன்ஹால் அருகே அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேரானது டவுன்ஹாலை அடுத்த தேர்நிலை திடலில் இருந்து ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி மற்றும் வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்நிலை திடலை சென்றடையும்.

அப்படி தேர் வலம் வரும் பாதையில் இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தளமான அத்தார் ஜமாத் மசூதி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வழியாக கோனியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்களுக்கு இந்த மசூதி அருகில் இஸ்லாமிய சகோதரர்கள் பல்வேறு உதவிகளை செய்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் கோனியம்மன் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உதவி செய்துள்ளனர். ஒப்பணக்கார வீதி அத்தார் ஜமாத் மசூதி அருகே தண்ணீர் பாட்டில்களையும், பிஸ்கட் பேக்கெட்டுகளையும் அடுக்கி அவற்றை கோனியம்மன் தேரைஇழுத்து வந்த பக்தர்களுக்கு வழங்கியுள்ளனர். இதேபோல் இலவச ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கி அசத்தியுள்ளனர். தேரை இழுத்து வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்து இந்து பண்டிகையான தேரோட்டத்தை மிகவும் சிறப்பாக கொண்டாட உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Coimbatore, Local News