ஹோம் /கோயம்புத்தூர் /

சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளால் சிக்கல்.. கவனிக்குமா கோவை காவல்துறை?

சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளால் சிக்கல்.. கவனிக்குமா கோவை காவல்துறை?

கோவை

கோவை

Coimbatore Police Department | கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவைப்புதூர் பிரிவு போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வதால் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவைப்புதூர் பிரிவில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராக கோவை மாநகரம் உள்ளது. கோவை தொழில் நகரம் என்பதைக் கடந்து இங்கு பிரபல பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கோவையில் தங்கி படித்து வருகின்றனர்.

இதுபோக ஏராளமான 'ஐ.டி' நிறுவனங்களும் கோவையில் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாநகர போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிக்னல்களில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவைப்புதூர் பிரிவு போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வதால் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

கோவைப்புதூர் பிரிவில் இருந்து கோவைப்புதூர் மற்றும் தொண்டாமுத்தூர், பாலக்காடு, உக்கடம் என்று கோவையின் மூன்று திசைகளுக்கும் செல்வதற்கான சாலைகள் உள்ளது. மேலும் இந்த சிக்னலுக்கு அருகிலேயே கல்லூரிகளும் உள்ளன. இப்படிப்பட்ட இடத்தில் உள்ள சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்ற நிலையில் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த போக்குவரத்து சிக்னலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. இதனிடையே கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுவதோடு, போக்குவரத்து போலீசார் காலையிலும் மாலையிலும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகஉள்ளது

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News