முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்

X
கொடியசைத்து

கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

Mobile Food Analyzer in Coimbatore | இந்த வாகனம் அந்த பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் உள்ள உணவு பொருட்களை பரிசோதிக்க உள்ளதாக ஆட்சியர் தகவல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் புதிய நடமாடும் உணவு பகுப்பாய்வகத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் மீது புகார் எழுந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் புதிதாக 4 நடமாடும் பகுப்பாய்வகம் தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவையில் புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் உணவு ஆய்வகத்தில் பால் பொருட்கள், டீத்தூள், உணவில் உள்ள சர்க்கரை அளவு, உணவுப் பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்வதற்கான ஆய்வக உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் கோவை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் இந்த வாகனம் அந்த பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் உள்ள உணவு பொருட்களை பரிசோதிக்க உள்ளது. இந்த வாகனத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் ஆய்வாளர்கள் இருப்பார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விநியோகம் செய்வதாகவும் நாளுக்கு நாள் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே நடமாடும் உணவு ஆய்வகம் மூலம் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மதிப்பீடு சான்று தரப்படுகிறது. மேலும் மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றனர்.

First published:

Tags: Coimbatore, Local News