Home /coimbatore /

10 ரூபாய் காயினுக்கு ஹெட்போன், சார்ஜர், நெக் பேண்ட்.. கோவையில் மொபைல் கடையின் 3 நாள் ஆஃபர்..

10 ரூபாய் காயினுக்கு ஹெட்போன், சார்ஜர், நெக் பேண்ட்.. கோவையில் மொபைல் கடையின் 3 நாள் ஆஃபர்..

கோவை

கோவை

கோவையில் 10 ரூபாய் காயினுக்கு ஹெட்போன், சார்ஜர், நெக் பேண்ட் : மொபைல் கடையின் அசத்தல் அறிவிப்பு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
10 ரூபாய் காயின்கள் கொடுத்து செல்போனுக்கான டெம்பர் க்ளாஸ், ஹெட்போன், டேட்டா கேபிள், பேன்சி பேக் கேஸ் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள செல்போன் உதிரிபாக கடை அறிவித்துள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையில் ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை அருகே  "மொபைல் பாய்ஸ்" என்ற பெயரில் செல்போன் ஆக்சசரீஸ் விற்பனையகம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் செப்டம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் திறப்பு விழா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் காயின்கள்:

10 ரூபாய் காயின்களை பலரும் வாங்க தயக்கப்படும் சூழலில், இந்த கடை நிர்வாகம் 10 ரூபாய் காயின்கள் கொண்டுவருபவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

இதையும் படிங்க:  ரோலர் ஸ்கேட்டிங்கில் கோவையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் மாணவி.!

அதன்படி, 10 ரூபாய் காயின் ஒன்று கொடுத்தால் மொபைலுக்கான டெம்பர் க்ளாஸ், 2 காயின்கள் கொடுத்தால் OTG கேபிள், 3 காயின்கள் கொடுத்தால் மூன்று மாத வாரண்டியுடன் கூடிய ஹெட்போன், 4 காயின்கள் கொடுத்தால் டேட்டா கேபிள் கொடுக்கப்படுகிறது.

பத்து ரூபாய் காயின்கள் 5 கொடுத்தால் 6டி டெம்பர் க்ளாஸ் வாங்கிக் கொள்ளலாம், 6 காயின்கள் கொடுத்தால் கார் சார்ஜர் அடாப்டர், 7 காயின்கள் கொடுத்தால் ரூ.300 மதிப்புள்ள செல்பி ஸ்டிக் வாங்கிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: நீங்களும் பாடகராகலாம்... பாத்ரூம் சிங்கர்களை மேடை பாடகர்களாக மாற்றி வரும் கோவை நிறுவனம்..

8 காயின்கள் கொடுத்தால் பேன்சி பேக் கேஸ் (Phone Back case) , 9 காயின்கள் கொடுத்தால் ப்ளிப் பவுச் (Flip Pouch) 10 காயின்கள் கொடுத்தால் ரூ.1500 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் ( Neck band bluetooth Headphone) வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர அனைத்து உதிரி பாகங்களுக்கும் 50 சதவீத ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் இந்த ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்த விவரங்களுக்கு 9944110000, 9488111000, 8122211000 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

Kovai Mobile Boys
அசத்தல் ஆஃபர் அறிவித்துள்ள மொபைல் கடைக்கான வழியை காட்டும் கூகுள் வரைபடம்
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி