முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு..

கோவையில் சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News : கோவை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கோவையில் கடன் வழங்க இருப்பதாகவும், இதற்காக சிறுபான்மையினர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியிருப்பதாவது,“தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண் 0422 -2300404ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம்"இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Coimbatore, Local News