முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / உதகையில் மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் பறை இசைத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

உதகையில் மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் பறை இசைத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

பறை இசைத்த அன்பில் மகேஸ்

பறை இசைத்த அன்பில் மகேஸ்

5 நாள் நடைபெறும் பயிற்சி முகாமில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

  • Last Updated :
  • Coimbatore, India

உதகையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பறை இசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் 5 நாள் நடைபெறும் பயிற்சி முகாமில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், தோடர் பழங்குடியின மக்கள் கலாச்சார உடை அணிந்து பாரம்பரிய நடனத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

top videos

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காதர்லா உஷா, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Coimbatore, Tamil News