ஹோம் /கோயம்புத்தூர் /

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்.. கோவையில் 10,000 பேர் பங்கேற்பு

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்.. கோவையில் 10,000 பேர் பங்கேற்பு

X
மாரத்தான்

மாரத்தான் போட்டி

Coimbatore News : மனநலத்தை பாதுகாக்க கோவையில் 10,000 பேர் கலந்துக்கொண்ட மினி மாரத்தான்

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் 10,000 பேர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தனியார் கல்லூரி சார்பில் மனநலம் பேணுதல் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் போட்டியானது ஐந்து கிலோ மீட்டர்,எட்டு கிலோமீட்டர் மற்றும் சிறப்புப் பிரிவு என மொத்தம் மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.

ஐந்து கிலோமீட்டர் பிரிவில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி, மாணவர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, கணியூர் சுங்கச்சாவடியில் தொடங்கி கே.பி.ஆர் கல்லூரி வரை ஓடினர்.

எட்டு கிலோமீட்டர் மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டியில் தொடங்கியது. இதில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பொதுப்பிரிவு மாரத்தான் போட்டியில்ஆண்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரிவில் மாரத்தான் போட்டியில்பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர் . இந்த போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சுங்கத்துறை உதவி ஆணையர் நடராஜன், தடகள போட்டி வீரர் பிரவீன் சித்திரவேல், திரைப்பட நடிகர் ரியோ ராஜ்ஆகியோர், போட்டி தூரத்தை முதலில் கடந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News