முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் : மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய புதிய அப்டேட் இதோ!

கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் : மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய புதிய அப்டேட் இதோ!

மாதிரி படம்

மாதிரி படம்

Kovai Metro Train : கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்து. இந்த திட்டப் பணிகளுக்காக தனது டெப்போவை கோவை வெள்ளலூரில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைக்க உள்ளது.

அதன்படி கோவை வெள்ளலூர், உக்கடம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், லட்சுமி மில், நவ இந்தியா, பீளமேடு புதூர், ஹோப்கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, விமானநிலையம், நீலாம்பூர், பி.எஸ்.ஜி. பவுண்டரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் முதல்கட்ட காரிடார் -1 செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்ட திட்டம் 31.7 கிலோ மீட்டர் தூரமாகும்.

கோவை - அவினாசி சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,625 கோடி செலவில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. எனவே இந்த சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் மிகவும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கோவை - அவினாசி சாலையில் சுரங்கம் தோண்டுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும். எனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி... 

மெட்ரோ ரயில் காரிடார் 2 திட்டம் கலெக்டர் அலுவலகம், ராம்நகர், காந்திபுரம் பஸ்நிலையம், ஆம்னி பஸ்நிலையம், மூர் மார்க்கெட், கணபதி புதூர், அத்திப்பாளையம் ஜங்சன், ராமகிருஷ்ணா மில், வினாயகபுரம், சித்ரா நகர், சரவணம்பட்டி, விசுவாசபுரம், வி.ஜி.பி. நகர், வையம்பாளையம் பிரிவுவரை 14 கிலோமீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் காரிடார் - 1 திட்டம் வெள்ளலூரில் தொடங்கி நீலாம்பூரில் முடிவடைகிறது. 31.7 கிலோ மீட்டர் தூரமாகும். காரிடார்-2 திட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி சத்தி ரோடு, வையம்பாளையம் பிரிவில் முடிகிறது. இதன் தூரம் 14.1 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த திட்டங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) செயல்படுத்துகிறது. இறுதி திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 மாதங்களில் மெட்ரோ ரெயில் இறுதி திட்ட அறிக்கை தயாராக உள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Metro Train