முகப்பு /கோயம்புத்தூர் /

”நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்” கோவையில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

”நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்” கோவையில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

X
தொழில்

தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Coimbatore News | பெண் தொழில் முனைவோர் தொழில் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு மையம் சார்பில் பெண் தொழில் முனைவோருக்கு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை படேல் சாலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு இந்த மையத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் தொழில்கள் மேம்பாட்டுக்கு இந்த மையம் வழிவகை செய்து கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மையத்தில் பெண்களுக்கான சிறப்பு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் வணிக நிறுவனங்கள் மேம்பாட்டு சங்கம், கோ குளோபல் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு மைய உதவி இயக்குநர்கள் பிரபு மற்றும் கயல்விழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெண் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகள் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், தொழில் மையம் சார்பில் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பெண் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண் தொழில் முனைவோர் தொழில் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

First published:

Tags: Coimbatore, Entrepreneurship, Local News