மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக 23 லட்சம் மோசடி தொடர்பாக புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் தனசெல்வன் இவர் சென்னை மத்திய தூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவரது மனைவி பியூலா இவர்களது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா எம்.பி.பி.எஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.எல்.ஆர் டூட்டி பெய்டு ஷாப் நடத்தி வந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார்.
ஆனால் மருத்துவ படிப்பு சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக அலைக்கழித்து ஏமாற்றியதாகவும், இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், முதலமைச்சர் செல் பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார் கொடுத்துள்ளார்.
புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த பியூலா (17 ஏப்ரல்) அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல்ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர் மீது நீரை ஊற்றி காப்பாற்றினர்.இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட பெண்ணை காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News