ஹோம் /கோயம்புத்தூர் /

இந்த தேதியில் இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை..

இந்த தேதியில் இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை..

மாதிரி படம்

மாதிரி படம்

Meat Shops Remaining Closed : இந்த தேதியில் இறைச்சி விற்பனைக்கு தடை கோவை மாநகராட்சி அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் இந்த தேதியில் இறைச்சி விற்பனை செய்ய தடைவிதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “திருவள்ளுவர் தினம் வரும் ஜனவரி 16ம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது, இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை ஜனவரி 16ம் தேதி திறக்கக்கூடாது. அன்றைய தினம், மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சத்தி சாலை, போத்தனூர் அறுவை மனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது.

இந்த உத்தரவை மீறி திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News