Home /coimbatore /

கோவை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பறவை காவடி எடுத்த பக்தர்கள்

கோவை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பறவை காவடி எடுத்த பக்தர்கள்

திருவிழாவில் பறவைக்காவடியில் வந்த பக்தர்

திருவிழாவில் பறவைக்காவடியில் வந்த பக்தர்

காளப்பட்டியுல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவை காளப்பட்டி அடுத்த முத்தமிழ் நகர் பகுதியில், உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவில் 7ம் ஆண்டு சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பறவைகாவடி எடுத்தனர்.

    கோவை காளப்பட்டி பகுதியில், உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் 7ம் ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 13ம்தேதி, கோடியேற்றுத்துடன், காப்புகட்டி துவங்கபட்டது.

    இதனை தொடர்ந்து இன்று, காலையில் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டு, ஸ்ரீ ராமர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    பால்குடம் எடுத்து வருவதுடன், பக்தர்கள் அலகு குத்தி, பாதகொட்டு அணிந்து ஊர்வலமாக வந்தனர், கத்தி காவடியுடன், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். பக்தி பரவசத்துடன் பறவை காவடி எடுத்து, உடலில் 8 இடங்களில் அலகு குத்தியவாறு பறந்தபடி ஊர்வலமாக வந்தனர்.

    இதனை தொடர்ந்து அலகு குத்தியவர்கள் பக்தி பரவசத்துடன், சாட்டையடித்தும் நடனமாடியும் அருள் வாக்கு சொல்லி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்தனர்,

    நாளை மீண்டும் ராமர் கோயிலில் இருந்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல், கஞ்சி வார்த்தல், நிகழ்ச்சி நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற உள்ளது.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி