ஹோம் /கோயம்புத்தூர் /

2ம் சபரிமலை.. கோவை சித்தா புதூர் ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்ட தயாராகும் பக்தர்கள்..

2ம் சபரிமலை.. கோவை சித்தா புதூர் ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்ட தயாராகும் பக்தர்கள்..

கோவை

கோவை சித்தா புதூர் ஐயப்பன் கோவில்

Kovai Sidha Pudur Ayappan Temple | கோவையில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் மண்டல பூஜைகள் துவங்க உள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது. மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் விரதமிருந்து இருமுடிகட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கும் செல்ல தவறுவதில்லை.

இந்த கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு உஷ பூஜை, 7 மணிக்கு சீவேலி பூஜை, 8 மணிக்கு அலங்கார பூஜை, 8.30 மணிக்கு பந்திரடி பூஜை, 10.30 மணிக்கு உச்ச பூஜை, 11 மணிக்கு உச்ச சீவேலி பூஜை நடைபெறுகிறது. தினமும் மதியம் 1 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாரதனை, 8.30 அத்தாள பூஜை 9 ஹரவராசனத்துடன் நடை அடைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போது சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் சுவாமி கோயிலில்மண்டல பூஜை காலம் 17ம் தேதி முதல் தொடங்குகிறது

மண்டல பூஜைகளை முன்னிட்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 13 ஆம் தேதி அய்யப்பட களபாபிஷேகம் நடைபெற உள்ளது. டிசம்பர் 17-ந் தேதி அகண்ட நாம பஜனையும் 18ம் அன்னதானமும் நடைபெற உள்ளது.தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி மகா கணபதி ஹோமமும் மண்டல விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனிடையே மகர விளக்கு காலங்களில் மாலை அணிவதற்கும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்வதற்காகவும் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஐய்யப்பா சேவா சங்கம் செய்துள்ளதாகவும், ஜனவரி 14ம் தேதி மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனையும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Sabarimala