முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ஒருதலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு போலீசார் வலை..!

ஒருதலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு போலீசார் வலை..!

இளம்பெண்னை கத்தியால் குத்திய இளைஞர்

இளம்பெண்னை கத்தியால் குத்திய இளைஞர்

கத்தியால் குத்தியவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராம். இவர் தன்னுடன் ஏற்கெனவே கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவரை, ஒருதலையாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் பணிபுரியும் நிறுவனத்துக்குச் சென்ற ஸ்ரீ ராம், தன்னைக் காதலிக்கும்படி அப்பெண்ணிடம் வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  இன்ஸ்டாகிராம் மூலம் வலை... சொகுசு கார்... ரூ.20 லட்சம் மோசடி... ஆசைவார்த்தை கூறி தொழிலதிபரை ஏமாற்றிய இன்ஸ்டா ராணி...!

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டுத் தப்பியோடியதாக சொல்லப்படுகிறது. இதில் கழுத்து, முகம் உட்பட நான்கு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Crime News, Stabbed