முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் வெறிச்செயல்

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் வெறிச்செயல்

கைதான ரஜ்னேஷ் குட்டன்

கைதான ரஜ்னேஷ் குட்டன்

பள்ளி செல்லும் மாணவியை அவரது உறவினரே காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தததால் அதிர்ச்சி.

  • Last Updated :
  • Coimbatore, India

உதகை அருகே தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த  சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திங்கள் கிழமை மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள உறவினர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த அவர் தான் வீட்டிற்குத்தான் செல்கிறேன் என்றும், மாணவியை வீட்டில் விட்டுவிடுவதாகவும் கூறி வண்டியில் ஏறுமாறு கூறியுள்ளார். உறவினர் தானே என நம்பிய சிறுமி காரில் ஏறிச் சென்றுள்ளார். மாணவியை காரில் ஏற்றி கொண்ட ரஜ்னேஷ் குட்டன் பைக்காரா சாலையில் உள்ள அங்கர் போர்ட் வன பகுதிக்குள் அவரை அழைத்து சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் இருந்த அவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் மாணவியை தேடி உள்ளனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காரில் வேகமாக வந்த ரஜ்னேஷ் குட்டனை பழங்குடியின இளைஞர்கள் நிறுத்தி கேட்ட போது முன்னுக்கு பின் முரனாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையும் படிக்க : அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய இளைஞர் - சிறுமி மரணத்தில் வெளியான பகீர் தகவல்

ரஜ்னேஷ் குட்டன்தான் சிறுமியை காரில் அழைத்துச் சென்றார் என்ற தகவல் அனைவரும் தெரியவந்த நிலையில், சந்தேகமடைந்த அவர்கள் வனப்பகுதிக்குள் சென்று சல்லடைப்போட்டு தேட ஆரம்பித்தனர். அப்போது வனப்பகுதிக்குள் புதர் பகுதியில் சிறுமியின் புத்தகப் பையை முதலில் கிடைத்துள்ளது. வனப்பகுதிக்குள் சென்று தேடிப் பார்த்த போது சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பைக்காரா போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ரஜ்னேஷ் குட்டன் தனியாக பாலியல் வன்கொடுமை செய்தாரா? அல்லது அல்லது கூட்டு பாலியல் சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் இடத்தில் கைப்பற்றப்பட்ட வீல் ஸ்பேனர் மற்றும் சில தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ரஜ்னேஷ் குட்டனை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் புதன் அன்று காலை நஞ்சநாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பைக்காரா காவல் நிலையத்தில் ரஜ்னேஷ் குட்டன் சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தோடர் இன பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் : ஐயாசாமி (ஊட்டி)

    First published:

    Tags: Child Abuse, Crime News, POCSO case, Sexual abuse, Tamil News