முகப்பு /கோயம்புத்தூர் /

5 நிமிடங்களில் 21 திருநங்கைகளுக்கு நச்சுன்னு 'மேக்-அப்'.. கோவையில் அசத்திய ஒப்பனை கலைஞர்கள்!

5 நிமிடங்களில் 21 திருநங்கைகளுக்கு நச்சுன்னு 'மேக்-அப்'.. கோவையில் அசத்திய ஒப்பனை கலைஞர்கள்!

X
கோவை

கோவை திருநங்கைகள்

Coimbatore news: கோவையில் 5 நிமிடங்களில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து தனியார் அழகு கலை பயிற்சி  நிலையத்தை சேர்ந்த பெண்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் 5 நிமிடங்களில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து தனியார் அழகு கலை பயிற்சி நிலையத்தை சேர்ந்த பெண்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

திருநங்கைகளின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும், மேக்கப் கலையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் "திருநங்கைகளும் சாதிக்கலாம்" எனும் தலைப்பில் கோவை தடாகம் சாலையில் உள்ள தனியார் .அழகு கலை பயிற்சி நிலையத்தில் ஒப்பனை கலை சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒப்பனை கலைஞர்கள் தங்களது அழகு கலையைப் பயன்படுத்தி 21 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் ஒப்பனை செய்தனர். 21 திருநங்கைகளையும் வரிசையாக அமர வைத்த சாதனை குழுவினர், திருநங்கைகளுக்கு,கண்களை அழகு படுத்துவது, லிப்ஸ்டிக் மற்றும் முக அழகை கூட்டுவது என வெறும் ஐந்தே நிமிடங்களில் மணப்பெண்கள் போல முழு மேக்கப் செய்து அசத்தினர்.

குறைந்த நேரத்தில் குழுவாக செயல்பட்டு செய்த இந்த ஒப்பனை நிகழ்ச்சி, ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஒரே நேரத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து வினோத உலக சாதனை நிகழ்ச்சியை நடத்திய குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News, Makeup