ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது..

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது..

X
கோவை

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில்

Coimbatore District News: கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூன்றாம் நாள் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்றும் இன்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று காலை காலை 4.30 மணி அளவில் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவிலில் இரண்டாம் நாள் மகா தீபம் ஏற்றப்பட்டது. தர்மலிங்கேவரர் கோவில் தர்மகர்தா குழுவினர் இந்த மகா தீபத்தை ஏற்றினர்.

இதையும் படிங்க : Coimbatore News : ''லொல்.. லொல்.." தொல்லைக்கு கோவையில் போட்டாச்சு தடை!

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மகா தீபத்தை வழிபட்டனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த மூன்று நாட்களும் மதுக்கரை, எட்டிமடை மற்றும் திருமலையாம்பாளையம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பொறுப்பேற்று மகா தீப விளக்கேற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த மகா தீபம் 5 அடி கொப்பரையில் 150 லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவைப்புதூர் நடைபயிற்சி நண்பர்கள் சார்பில் அன்னதனம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News