முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை வடவள்ளி அஜ்ஜனூர் கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 

கோவை வடவள்ளி அஜ்ஜனூர் கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 

X
கோவை

கோவை வடவள்ளி அஜ்ஜனூர் கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 

Coimbatore News | கோவை அஜ்ஜனூரில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் வடவள்ளி அஜ்ஜனூர் பகுதியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கற்பக விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தேவ சிவ காம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் அஜ்ஜனூர் பரிபாலனா குடியிருப்போர் பலர் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வை ஆனைகட்டி ஆசிர வித்யா குருகுலம் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி மற்றும் சுவாமி ஜெகதாத்மானந்த சரஸ்வதி ஆகியோர் நடத்தி வைத்தனர். மேலும் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி யாகம் நடத்தப்பட்டு மகா கணபதி யோக வேள்வி மகாலட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்று நான்கு கால பூஜைகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கும்பாபிஷேகம் செய்த தீர்த்தங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Coimbatore, Local News