முகப்பு /கோயம்புத்தூர் /

காதலர் தினத்தன்று கரம்பிடித்த காதல் பறவைகள்... கோவை பெரியார் படிப்பகத்தில் சாதிமறுப்பு திருமணம்.!

காதலர் தினத்தன்று கரம்பிடித்த காதல் பறவைகள்... கோவை பெரியார் படிப்பகத்தில் சாதிமறுப்பு திருமணம்.!

X
காதலர்கள்

காதலர்கள் திருமணம்

Lovers marriage | மாற்று மதத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சாதியே இல்லை என கூறி கோவை பெரியார் படிப்பகத்தில் கருப்பு உடையில் திருமணம் செய்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் காதலர் தினத்தன்று பெரியார் படிப்பகத்தில் வைத்து இளம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் இல்லாத உயிரினமே இல்லை என்று கூறலாம். ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மேல் காட்டும் அக்கறைக்கும், துவண்டு கிடக்கும் காலத்தில் அரவணைக்கவும் தனக்கான கைகளுக்காக ஏங்காத மனிதர்களே இல்லை.  இப்படிப்பட்ட காதலையும், காதலர்களையும் கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த கவுதம் மற்றும் ரீனா ஜெனிட்டர் என்ற இளம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு காதலர் தினத்தை கொண்டாடினர். மாற்று மதத்தை சேர்ந்த தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்தபின் எந்த மதமும் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் பெரியார் படிப்பகத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் இளம் தம்பதியினர் தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Love marriage, Lovers, Marriage, Valentine's day