முகப்பு /கோயம்புத்தூர் /

"ஒரு போட்டோ கிடைக்குமா அண்ணானு கேட்டேன்" காதல் டூ திருமணம் குறித்து கோவை புதுமண தம்பதி கலகல பேச்சு!

"ஒரு போட்டோ கிடைக்குமா அண்ணானு கேட்டேன்" காதல் டூ திருமணம் குறித்து கோவை புதுமண தம்பதி கலகல பேச்சு!

X
புதுமண

புதுமண தம்பதி

Coimbatore Lovers Day Celebration | கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் - விவேகா தம்பதியினர் அவரகளது காதல் To கல்யாணம் வாழக்கை குறித்து மனம் திறந்து பேசினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

உலகமெங்கும் காதலர்களால் காதலர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் தங்களுக்கு விருப்பமானவர்களிடம் அன்பை தெரிவித்தும் தங்களது காதலை காதலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் காதல் ஜோடிகள் காதலர் தினத்தன்று திருமணம் செய்துள்ளனர். இதனிடையே கோவையில் காதல் திருமணம் செய்து ஒரு மாதமே ஆன காதல் ஜோடிகள் காதலர் தினத்தில் தங்களது காதலை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் - விவேகா தம்பத்யனர். இந்த புதுமணத் தம்பதியினரிடம் காதல் To கல்யாணம் குறித்து கேட்டடோம். அப்போது அர்ஜூன் கூறுகையில், " நான் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும் பணியை செய்து வருகிறேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அந்த திருமண நிகழ்வில் விவேகாவை சந்தித்தேன். நான் புகைப்படம் எடுப்பதை பார்த்து, என்னிடம் "ஓரு போட்டோ கிடைக்குமா அண்ணா" என்று கேட்டார். அப்போது முதல் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலித்தோம். தற்போது திருமணம் செய்துள்ளோம் என்றார்.

விவேகா கூறுகையில், "திருமணத்திற்கு முன்பு அவரை பார்க்க முடியாது. ஆனால், இப்போது பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இந்த ஒரு மாத்தில் எங்களுக்கு எந்த வேறுபாடும் தெரியாமல் அழகான வாழ்க்கையை தொடங்கியுள்ளோம்" என்றார் இன்முகத்துடன்.

First published:

Tags: Coimbatore, Local News, Love marriage, Lovers, Lovers day, Valentine's day