முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் வீட்டுமனை வாங்க போறீங்களா? இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..!

கோவையில் வீட்டுமனை வாங்க போறீங்களா? இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..!

X
கோவையில்

கோவையில் வீட்டுமனை வாங்க போறீங்களா?

Plots in Kovai : கோவையில் வீட்டுமனைகள் வாங்கும்போது தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டுமனை வாங்குவோர் இந்த விஷயங்களை கவனிச்சு வாங்குங்க.

சொந்த வீடு என்பது இன்றளவும் மிடில் கிளாஸ் மக்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. "எப்படியாவது ஒரு வீடு வங்கனும்… அம்மா-அப்பாவை நம்ம சொந்த வீட்டுல உக்கார வைக்கனும்.." என்பது சமீபத்தில் பொறுப்புகள் அதிகரித்த 90's கிட்ஸ்களின் தாரக மந்திரமாக மாறி இருக்கிறது. கனவை நனவாக்க கடுமையாக உழைத்து அடிப்படை வசதிகளற்ற, முறையான ஆவணங்கள் இல்லாத வீட்டுமனையை அல்லது ஒரு வீட்டை வாங்கிவிட முடியுமா?

இப்படியான நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டுமனைகளின் முழு விவரங்கள், சுற்றுவட்டாரங்களில் உள்ள வசதிகள் குறித்த முழு விவரங்களை உள்ளடக்கிய இணையதளம் கோவையை மையமாக வைத்து துவங்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில் பிராபர்டி எக்ஸ்போ என்ற பெயரில் கட்டுமானம் தொடர்பான பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தான் ‘ஃபைன்ட் மை பிளாட்ஸ்’ (findmyplots) என்ற நிறுவனத்தின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொடர்பாக பல இணையதளங்கள் உள்ள போது இது என்ன புதிதாக இருக்கிறதே என்று பார்வையிட்டோம்.

இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் ஆதித்யன் கூறியதாவது, “ஃபைன்ட் மை பிளாட்ஸ்’ (Findmyplots.com) என்ற இணையதளம் பெங்களூருவை அடிப்படையாக கொண்டது. இந்தியாவிலேயே அதிகமாக பெங்களூர் மற்றும் கோவையில் தான் ரியல் எஸ்டேட் தொழில் அதிகமாக உள்ளது. எனவே இந்த இரு நகரங்களிலும் வீட்டுமனை வாங்கும் மக்களுக்கு முழு விவரங்களை தொகுத்து வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

எங்களது இணையதளம் பிசினஸ்-டு-பிசினஸ் என்ற கோட்பாட்டின் படி இயங்குவது. சகல வசதிகளுடன் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனையாகாமல் இருப்பவர்களும் உண்டு, நல்ல வீட்டுமனை ஒன்றை வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்களும் உள்ளனர். இந்த இடைவெளியை எங்கள் இணையதளம் குறைக்கிறது. வீட்டுமனைகளை விற்பனை செய்பவர்களிடம் அதன் முழு விவரங்களை பெற்று எங்களது இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்.

கோவையில் வீட்டுமனை வாங்க போறீங்களா?

இதையும் படிங்க : என்னது இந்த நதி கண்ணுக்கு தெரியாதா? - அதுவும் நம்ம ஈரோட்டில் உள்ளதா..!

உதாரணத்திற்கு கோவையில் ஈச்சனாரி பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எங்கெங்கு வீட்டுமனைகள் உள்ளன? அங்கு சாலை வசதிகள் எப்படி, குடிநீர், மின்சாரம், அருகில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆலயங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல விவரங்களை உள்ளீடு செய்கிறோம்.

மேலும், வீட்டுமனை கேட்டெட் கம்யூனிட்டியாக இருப்பின் ஜிம், நீச்சல் குளம், மளிகை பொருட்கள் வாங்கும் இடங்கள் , நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் உள்ளதா? பராமரிப்பு செலவினங்கள் என்ன? பாதாள சாக்கடை வசதிகள் எப்படி உள்ளது உட்பட அனைத்து விவரங்களையும் தொகுத்திருக்கிறோம். இந்த அத்தனை விவரங்களையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பொதுமக்களால் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், 3 சென்ட் அளவுள்ள இடம் தான் வேண்டும், ஒரு சதுரடியின் விலை இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் சில நிபந்தனைகளை வைத்திருப்பார்கள். அவர்களது வசதிகளுக்கு ஏற்ப ஃபில்டர் (Filter) வசதிகளும் எங்களது இணையதள பக்கத்தில் இருக்கும். இதன் மூலம் விருப்பம் மற்றும் வசதிக்கு ஏற்ப ஒரு நிலத்தை மக்கள் வாங்கிக் கொள்ள முடியும். தரகர்களுக்கு கமிஷன் தொகையும் கொடுக்கும் தேவை இருக்காது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு தொகையும் நாங்கள் வசூலிப்பதில்லை. விரைவில் அடுத்தடுத்த நகரங்களிலும் எங்களது நிறுவனத்தைத் தொடங்க உள்ளோம்” என்று ஆதித்யன் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    நம் வருவாய்க்கு ஏற்ற வீட்டுமனை வாங்குவதற்கும், அங்குள்ள வசதிகளை அறிந்து கொள்வதற்கான அத்தனை தகவல்களையும் வழங்கும் இந்த இணையதளம் வீடு வாங்க நினைப்போருக்கு உதவலாம்.

    First published:

    Tags: Coimbatore, Local News