ஹோம் /கோயம்புத்தூர் /

மின்நுகர்வோர்களுக்கு ஆதார் எண் இணைப்பு.. கோவையில் 154 இடங்களில் சிறப்பு முகாம்...

மின்நுகர்வோர்களுக்கு ஆதார் எண் இணைப்பு.. கோவையில் 154 இடங்களில் சிறப்பு முகாம்...

ஆதார் இணைப்பு முகாம்

ஆதார் இணைப்பு முகாம்

Coimbatore District News : கோவை மாவட்டத்தில் மின் நுகர்வோர்களுக்கான ஆதார் எண் இணைப்பு முகாம் நடக்கும் இடங்கள் குறித்து மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டத்தில் மின் நுகர்வோர்களுக்கான ஆதார் எண் இணைப்பு முகாம் நடக்கும் இடங்கள் குறித்து மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் வாரியம் அறிவித்தது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து பொது மக்கள் பலரும் இணைத்து வருகின்றனர்.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் உதவி பொறியாளர் அலுவலகங்களில் 154 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த அலுவலகங்களில் இதற்காக தனி கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும்.

இதையும் படிங்க : குடிப்பழக்கத்தை விடாத தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்... பொள்ளாச்சியில் பரபரப்பு சம்பவம்

இன்று கோவையில் உள்ள அனைத்து முகாம்களிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக காலை முதலே ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உரிய ஆவணங்களை கொடுத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கோவையில் 154 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் தனி கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு ஒரு ஊழியர் பணியில் உள்ளனர். பொதுமக்கள் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு முகாம்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.

அங்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்து, செல்போனுக்கு வரும் ஒ.டி.பியை பதிவு செய்தால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். வாடிக்கையாளர்களின் செல்போனுக்கும் குறுஞ்செய்தி வரும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

www.tangedco.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News