முகப்பு /கோயம்புத்தூர் /

கோனியம்மன் கோயில் தேரோட்டத்தன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரும் கோவை மக்கள்..

கோனியம்மன் கோயில் தேரோட்டத்தன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரும் கோவை மக்கள்..

X
கோனியம்மன்

கோனியம்மன் கோயில்

Coimbatore Arulmigu Koniamman Temple | இந்த ஆண்டில் மார்ச் மாதம் 1ம் தேதி கோவை கோனியம்மன் தேரோட்டம் கொண்டாடப்பட உள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கோனியம்மன் கோவிலை மாசி மாதம் திருத்தேரோட்டத்தின்போது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோனியம்மன் கோவிலை தெரியாத கோவை வாசிகள் இருக்கமாட்டார்கள். கோவையின் காவல் தெய்வம் அழைக்கப்படும் கோனியம்மனின் கோவில் டவுன்ஹாலில் உள்ள மணிக்கூண்டு பகுதியில் அமைந்துள்ளது. இந்து சமைய அறநிலையத்துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் இந்த வழிபாட்டுத் தளத்தில் மூலதெய்வமான கோனியம்மனை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த தேரோட்டத்தில் கோவை மக்கள் மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு கோனியம்மன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்று அம்மனை வழிபடுவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 1ம் தேதி கோனியம்மன் தேரோட்டம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேரோட்ட நிகழ்வின் போதும் டவுன்ஹால் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் இவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகின்றன.

இதனிடையே கோனியம்மன் கோவிலில் தேரோட்டத்தின் போது உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று பொதுமக்களும் இந்து அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே கோவையில் பல்வேறு சாலைகள் பழுதடைந்தும், உக்கடம் பகுதியில் மேம்பாலமும் கட்டப்பட்டு வருவதால் தேரோட்ட நாளில் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனால் தேரோட்ட நிகழ்வின் போது உள்ளூர் விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News