Home /coimbatore /

கோவையில் இத்தனை பல்கலைக்கழங்கள் உள்ளதா?- என்னென்ன தெரிந்துகொள்ளுங்கள்

கோவையில் இத்தனை பல்கலைக்கழங்கள் உள்ளதா?- என்னென்ன தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை  மாவட்டம் தமிழகத்தின் 2வது பெரிய நரகமாக கோவை அறியப்படுகிறது. இது செல்லமாக தொழில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கொங்கு வழக்கு பேசுகின்றனர். அவர்களின் பேச்சிலும் ஏன்னுங்கோ, என்னுங்கோ என்று பேசுவது பலருக்கும் பிடிக்க

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோயம்புத்தூர் மாநகரம் தமிழகத்தின் 2வது பெரிய நகரமாக  அறியப்படுகிறது. இது செல்லமாக தொழில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கொங்கு வழக்கு பேசுகின்றனர். அவர்களின் பேச்சிலும் ஏன்னுங்கோ, என்னுங்கோ என்று பேசுவது பலருக்கும் பிடிக்கும்.

    மேலும், கோவை மாவட்டம் கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள பல்கலைக்கழங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்ளலாம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகளவில் பல்கலைக்கழங்கள் காணப்படுகின்றன.

    அண்ணா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

    அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் (Anna University of Technology, Coimbatore) தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூர் நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும்.

    கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர், தர்மபூரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

    அம்ரிதா விசுவ வித்யாபீடம்

    அம்ரிதா விசுவ வித்யாபீடம் ( Amrita Vishwa Vidyapeetham) அல்லது அம்ரிதா பல்கலைக்கழகம் கேரளம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கோவை நகரிலிருந்து ஏறத்தாழ 22 கி.மீ தொலைவிலுள்ள எட்டிமடையில் அமைந்துள்ளது.

    அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம்

    அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் மகளிர்களுக்கான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

    அவிநாசிலிங்கம் செட்டியாரால் 1957-ம் ஆண்டு அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் மேற்பார்வையில் பெண்களுக்கான கல்லூரியாகத் துவங்கப்பட்டது. இது 1978-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழான தன்னாட்சி பெற்றக் கல்லூரியாகத் தகுதி பெற்றது. இவ்வாறு தன்னாட்சி வழங்கப்பட்ட எட்டு கல்லூரிகளில் இதுவொன்றே மகளிர் கல்லூரியாகும். இந்த நிறுவனம் 1988 ஆம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்வு பெற்றது.

    கற்பகம் உயர்கல்விக் குழுமம்

    கற்பகம் உயர்கல்விக் குழுமம் இந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அனுமதியுடன் செயற்பட்டு வருகிறது.

    காருண்யா பல்கலைக்கழகம்

    காருண்யா பல்கலைக்கழகம் (முன்னர் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம்) கோயம்புத்தூரில் அமைந்துள்ள முழுமையும் தங்கிப் படிக்கும் கிறித்தவ தனியார்த்துறை பல்கலைக்கழகம்.

    இந்தியாவின் முதற் பதினைந்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகவும் பொறியியல் கட்டமைப்புகளில் முதற் பத்து கல்லூரிகளில் ஒன்றாகவும் ஆங்கில இதழ் அவுட்லுக் மதிப்பிட்டுள்ளது.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1971 ஜூன் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990 இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992 இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.

    பாரதியார் பல்கலைக்கழகம்

    பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.

    இந்தப் பல்கலைக் கழகத்தின்கீழ் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 112 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன

    ராமகிருஷ்ணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்

    ராமகிருஷ்ணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் (Ramakrishna Mission Vivekananda University) ராமகிருஷ்ணா இயக்கத்தினர் நிர்வகிக்கும் ஓர் பல்கலைக்கழகமாகும். இது ஜூலை 2005இல் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி