ஹோம் /கோயம்புத்தூர் /

மன அழுத்தத்தை குறைக்க காவலர் வாகனங்களில் மினி நூலகம் - கோவையில் புதுமுயற்சி

மன அழுத்தத்தை குறைக்க காவலர் வாகனங்களில் மினி நூலகம் - கோவையில் புதுமுயற்சி

காவலர்

காவலர் வாகனங்களில் நூலகம்

Coimbatore News : மன அழுத்தத்தை குறைக்க காவலர் வாகனங்களில் நூலகம் அமைத்துள்ள கோவை காவல்துறை ஆணையரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

ஆயுதப்படை காவல்துறையினரை அழைத்துச் செல்லும் வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய நூலகத்தை  கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகஆயுதப்படை போலீசார் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்கள் பயணிக்கும் வாகனங்களில் சிறிய நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக செல்லும் போது இந்த வாகனங்களில் உள்ள நூல்களைபடித்து பயன் அடையும் வகையில் இந்த சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது .தமிழ் இலக்கியங்கள், உரை நடை, கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன்துவக்கி வைத்து போலீசாருக்கு புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது,” போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விளையாட்டுப்போட்டிகள், போலீசாருக்கான உடற்பயிற்சி கூடம், காவல் நிலையங்களிலேயே நூலகம் அமைக்கப்பட்டது. அதுபோல தற்போது காவல்துறை வாகனங்களில் நூலகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Also Read: தேசிய அளவிலான தடகள போட்டி : கோவை மாணவி  தங்கம் வென்று அசத்தல்

இந்த நூலகம் மூலமாக வெளியூர்களுக்கு பணிக்கு செல்லும் காவலர்கள் பணி முடிந்ததும், புத்தகங்களை எடுத்து படிக்க முடியும். இதன் மூலம் போலீசார் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும், மேலும் அறிவையும் மேம்படுத்தும், இந்த முயற்சி நிச்சயம் காவல்துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்று தரும்”என்றுகூறினார்

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Local News, Police, Tamil News