முகப்பு /கோயம்புத்தூர் /

விமரிசையாக நடைபெற்ற உக்கடம் சாமுண்டீஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

விமரிசையாக நடைபெற்ற உக்கடம் சாமுண்டீஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

X
கோவை

கோவை

Ukkadam Chamundeshwari Temple | உக்கடம் ராமர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

உக்கடம் ராமர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா நடைபெறவில்லை. இதனிடையே சமீபத்தில் சாமுண்டீஸ்வரி கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தினமும் காலை மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மேலும் படிக்க :  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

இதனைத் தொடர்ந்து விநாயகர் பூஜை நடைபெற்று. பூர்ணாகதியுடன் வேள்வி நடைபெற்றது. இதில் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் வளாகத்தைச் சுற்றி வந்து, மூலவர் அம்மன் மற்றும் பரிவார

கோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

சாமுண்டீஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் விழாவில் கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவரும், மாமன்ற உறுப்பினருமான மாரி செல்வன், கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News