முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

கோவை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

X
கோவை

கோவை கற்பக விநாயகர்

Kovai Karpaga Vinayakar Temple : கோவை அடுத்த துடியலூர் திருமுருகன் நகரில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அந்த வகையில் கோவை அடுத்த துடியலூர் திருமுருகன் நகரில் ஸ்ரீகற்பக விநாயகரை மூலவராக கொண்டு அன்னை ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி, ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீகுருவாயூரப்பன் சுவாமி என ஒரே ஆலயத்தின் சிறப்பாக கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில், கோவில் புணரமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆலய கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவஸ்ரீ மணிகண்ட சிவாச்சியார் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக மகாபூர்ணாஹுதி, தீபாரதனையுடன், புண்ணிய நதி தீர்த்தங்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சிறப்பு ஹோமங்களுடன் யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஸ்ரீகற்பக விநாயகர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்களுக்கு புண்ணிய நதி ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சாமி தரிசனம், தீபாராதானையுடன் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News