ஹோம் /கோயம்புத்தூர் /

கோவைனா கெத்தே! ஆல் ரவுண்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ”கோவையன்ஸ்"!

கோவைனா கெத்தே! ஆல் ரவுண்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ”கோவையன்ஸ்"!

X
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாணவர்கள்

Coimabatore agri college | ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் கோவை மாணவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற, விளையாட்டு போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கோவை வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிரது. இங்கு வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 2ம்தேதி தொடங்கியது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டிகளில், தமிழகத்தில் வேளாண் 24 கல்லூரிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தடகளபோட்டிகள், தொடர் ஓட்டம், சிலம்பம், நீச்சல், பாராலிம்பிக், பேட்மின்டன், செஸ், ஹாக்கி, கபடி, கோக்கோ, வாலிபால், டென்னிஸ் என பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று பரிசுகள் வழங்கும் விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பிரிவில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் மற்றும் பெண்கள் பிரிவில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் இரண்டையும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் தட்டிச்சென்றது.

ALSO READ | வாங்க.. வாங்க.. மக்களே! பலே வியாபாரிகளான கோவை எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள்..!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

First published:

Tags: Coimbatore, College, Local News, Students