கோவையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கோவை விழா கொண்டாடப்படுகிறது. சமையல், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு விதமான கண்கவர் நிகழ்ச்சிகள் இந்த கோவை விழாவில் நடைபெறும்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் பங்களிப்புடன் இணைந்து 15வது கோவை விழா பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை விழா நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி வாலாங்குளம் கரையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இணைந்து கோவை விழாவுக்கான தேதி மற்றும் இலச்சினையைவெளியிட்டனர்.
இதையும் படிங்க : மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம்
இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, “கோவை கடந்த 1804ம் ஆண்டு மாவட்ட அந்தஸ்து பெற்று படிப்படியாக மிகப்பெரிய மாநகராக வளர்ந்துள்ளது. கோவையின் பிறந்த நாளிலேயே கோவை விழா குறித்த அறிவிப்பு வெளியிடுவது சிறப்பாக உள்ளது. இசைக்கு பிரதிபலிக்கும் நீரூற்று, இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை கோவை விழாவில் இடம்பெறும்.
அதேபோல கடந்த ஆண்டு மரகதப்புறா கொரோனா அச்சம் காரணமாக மாஸ்க் அணிந்திருந்தது. இந்த ஆண்டு மாஸ்க் அணியாமல் சுதந்திரமாய் கோவை முழுக்க சுற்றி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. கோவையின் சிறப்பு வேறு எந்த நகருக்கும் இல்லை.
நகரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது இல்லை . ஆனால் கோவையில் மட்டும் தான் கிராமத்தில் நடப்பது போல் கடந்த 14 ஆண்டுகளாக திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டும் இந்தஉற்சாகம் சற்றும் குறையாமல் இருக்கும் என நம்புகிறோம்.” என பேசினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் “ கோவை விழா 15வது ஆண்டாக நடைபெறுவதால் அதை குறிக்கும் வகையில் 15 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் இந்த விழாவை தங்கள் சொந்த விழாவாக முன்னெடுத்து பிரமாண்டமாக நடத்தி தர வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடந்த முறை நடைபெற்ற சம்பவங்கள் போல் இந்த முறை நடக்காது. பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வடகோவை தென்கோவை என அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News