Home /coimbatore /

கோவையில் படகு சவாரி..! - எப்படி இருக்கு? கட்டணம் என்ன? - முழு விவரம்

கோவையில் படகு சவாரி..! - எப்படி இருக்கு? கட்டணம் என்ன? - முழு விவரம்

கோவை

கோவை வாலாங்குளம் படகு குழாம்

Coimbatore Valangulam Boat House : கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வாலாங்குளத்தில் படகு சவாரி துவங்கியது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் படகு குழாம் துவங்கப்பட்டு அதில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

கோவை வாலாங்குளத்தில் வந்தாச்சு படகு குழாம்...


வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி துவங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் வாலாங்குளத்தில் படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது.

கோவை வாலாங்குளத்தில் வந்தாச்சு படகு குழாம்...


இங்கு பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் சைக்கிளிங் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்படுகின்றன. பெடல் படகு 2 பேர் செல்லும் வகையிலும், 4 பேர் செல்லும் வகையிலும் உள்ளது. துடுப்பு படகு 4 பேர் செல்லும் வகையில் உள்ளது. மோட்டார் படகு 8 பேர் செல்லும் வகையில் உள்ளது.

கோவை வாலாங்குளத்தில் வந்தாச்சு படகு குழாம்...


சைக்கிளிங் படகில் ஒருவர் செல்லலாம்.
பெடல் படகுகளை பயன்படுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. துடுப்பு படகிற்கு ரூ.350ம், மோட்டார் படகுகளுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவை வாலாங்குளம் படகு குழாம்


 
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி