முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை உப்பிலிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

கோவை உப்பிலிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

X
கோவை

கோவை உப்பிலிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

Kovai Uppilipalayam Sakthi Mariamman Temple : கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

கோவை உப்பிலிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் அழைப்பு நிகழ்ச்சி மற்றும் புதன்கிழமை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் மாற்றும் பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மேள தாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் , மஞ்சள் நீராட்டு விழா மற்றும் வசந்த பூஜையுடன் விழா நிறைவுபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News