முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..

கோவை தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..

X
கோவை

கோவை தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா

Coimbatore Thandu Mariamman Temple : கோவை தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம் மற்றும் அழகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது ஒப்பணக்கார வீதி, வழியாக அவினாசி சாலையை வந்தடைந்து தண்டு மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.

கோவை தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் குடிநீர், நீர் மோர், குளிர்பானங்கள், கூழ் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பலர் நேர்த்திக்கடன் செலுத்துவோரின் பாதங்களுக்கு தண்ணீர் ஊற்றி ஆசி பெற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி கோவை மாநகர போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து காவல்துறையினரும் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News