ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் ரிவர்ஸில் நடந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள்.. எதற்கு தெரியுமா?

கோவையில் ரிவர்ஸில் நடந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள்.. எதற்கு தெரியுமா?

கோவை

கோவை

Coimbatore News | குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பதற்கு குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. பொறுப்பை உணர்ந்த கோவை கல்லூரி மாணவர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இணைந்து வித்தியாசமான பேரணி நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பின்னோக்கி நடக்கும் வித்தியாசமான பேரணிக்கு ஏற்பாடு செய்த கோவை கல்லூரி மாணவர்கள்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகெங்கும் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 6 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக போக்சோ எனப்படும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை அதிகமாக பதிவு செய்து வருகின்றது கோவை மாநகர காவல்துறை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பதற்கு குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. பொறுப்பை உணர்ந்த கோவை கல்லூரி மாணவர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இணைந்து வித்தியாசமான பேரணி நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். இதில் வித்தியாசமான முயற்சியாக கல்லூரி மாணவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பின்னோக்கி நடைபோட்டனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் “குழந்தைகள் மத்தியில் இருபாலினமும் சமம் என்ற எண்ணத்தை இளம் வயதிலேயே விதைப்புதும் அவசியம் ஆகிறது. மேலும் குற்றங்கள் தடுக்க குழந்தகளிடம் பெற்றோராக மட்டும் இல்லாமல் நண்பராக இருத்தலும் அவசியம் ஆகிறது, இதை பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர். மேலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலுவான சட்டங்களும், பொதுமக்கள் மத்தியில் இந்த சட்டஙக்ள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றுதெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News