Home /coimbatore /

தீர்மானம் போட்டு 12 வருஷம் ஆச்சு..! சவுரிபாளையம் திட்ட சாலை சாலை விரிவாக்கம் என்னாச்சு?

தீர்மானம் போட்டு 12 வருஷம் ஆச்சு..! சவுரிபாளையம் திட்ட சாலை சாலை விரிவாக்கம் என்னாச்சு?

கோவை

கோவை

Coimbatore City News : கோவையில் அவினாசி சாலையையும், திருச்சி சாலையும் இணைக்கும் முக்கிய சாலைகளுள் ஒன்றாக சவுரிபாளையம் திட்ட சாலை உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 12 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டும் இன்று வரையில் அது நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள திட்ட சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டும் இன்று வரையில் சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் 15 அடி குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

கோவையில் அவினாசி சாலையையும், திருச்சி சாலையும் இணைக்கும் முக்கிய சாலைகளுள் ஒன்றாக சவுரிபாளையம் திட்ட சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றியுள்ள சவுரிபாளையம், உடையாம்பாளையம், மசக்காளிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், பொது போக்குவரத்து மூலமும் அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்ல இந்த சவுரிபாளையம் திட்ட சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சவுரிபாளையம் திட்ட சாலை


இந்த சாலையில் பீளமேடு பகுதியில் இருந்து சவுரிபாளையம் மகாலட்சுமி கோவில் அருகே வரும் போது சாலை மிகவும் குறுகலாக அதாவது சுமார் 15 அடி அகலத்தில் உள்ளது. சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ள இந்த குறுகலான சாலைக்குள் ஒரு பேருந்து சென்றால் கூட கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த சாலையை விரிவுபடுத்த கடந்த 1994ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு, சாலை விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட வேண்டிய நில அளவு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

சவுரிபாளையம் திட்ட சாலை


பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகவே, கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் இந்த சாலையை விரிவுபடுத்த தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போதும் பணிகள் நடைபெறாததால், தொடர்ந்து மீண்டும் 2016ம் ஆண்டும் சாலையை விரிவுபடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி 12 ஆண்டுகள் ஆன போதிலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது சவுரிபாளையம் சாலை.
இப்படிப்பட்ட குறுகலான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே பேருந்து உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும் போது தடுமாறி விழுந்து உயிரிழக்கும் அவல சம்பவங்களும் சவுரிபாளையம் பகுதியில் அரங்கேறி வருகின்றன.

சவுரிபாளையம் திட்ட சாலை


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வாரந்தோறும் புதன் கிழமைகளில் சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் மைதானத்தில் வார சந்தையும் அமைக்கப்படுவதால், அந்த நாளில் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாது பெருந்துயரை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்த விரிவாக்க பணிகள் தற்போதாவது நிறைவேற்றப்படுமா என்பது 3 ஊர் மக்களின் கேள்வியாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி