Home /coimbatore /

கோவையில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல்..! : குமுறும்  தொழில் முனைவோர்

கோவையில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல்..! : குமுறும்  தொழில் முனைவோர்

குமுறும் கோவை

குமுறும் கோவை தொழில் முனைவோர்

Coimbatore District News | கோவையில் தனிப்பட்ட நபர்கள் விரோத மனப்பான்மையுடன் கொடுக்கும் புகார்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை தொழில் நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
தனிப்பட்ட நபர்கள் விரோத மனப்பான்மையுடன் கொடுக்கும் புகார்களின் பேரில் முறையான விசாரணை இன்றி கோவையில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக தொழில் முனைவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஜாப்-ஆர்டர்கள் பணி செய்யும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் இயந்திர உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவை ஜாப் ஆர்டர்களாக எடுத்து தயாரித்து கொடுக்கப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி கோவை மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இதனிடையே, தனிப்பட்ட நபர்கள் விரோத மனப்பான்மையுடன் கொடுக்கும் புகார்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை தொழில் நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு இடையர்பாளையம் டி.வி.எஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த சீல் வைக்கப்பட்டுள்ளன. கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களுக்கு மாநகராட்சியின் இது போன்ற நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கோவையில் புகழ் பெற்று விளங்கும் 10 கோவில்கள்

அந்த இரண்டு தொழில் கூடங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் கொடுத்த நபரின் புகாரில் உண்மை இல்லை. இதுகுறித்து முறையான ஆய்வு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு நோட்டீஸ்-க்கும் சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர்கள் பதில் அளித்து வந்துள்ள நிலையிலும் தொழில் முனைவோர் கொடுத்த எந்த நோட்டீஸ்-க்கும் மாநகராட்சி நிர்வாகம் பதில் தராமல் இரண்டு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொழில் நடத்துவோரின் நிலை இப்படியாகவே உள்ளது. கோவையின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்து வரும் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பெரும் கலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

தனிப்பட்ட நபர்களிடம் இருந்து புகார்கள் பெறப்படும்பட்சத்தில் விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கும் போக்கை இந்த அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தொழில் அமைப்புகள் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும்.

அந்த குழு முறையான விசாரணை நடத்தி புகாரில் உண்மைத்தன்மை உள்ளதா? உண்மையில் அங்கு இயங்கி வரும் தொழில் கூடங்களால் பாதிப்பு உள்ளதா என்று அறிக்கை பெற்று உண்மை நிலை கண்டறிய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எங்களது துயரத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.”  இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி