ஹோம் /கோயம்புத்தூர் /

துபாய் பேஷன் ஷோவில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்த கோவை சிறுவன்..

துபாய் பேஷன் ஷோவில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்த கோவை சிறுவன்..

கோவை

கோவை

Coimbatore Special | துபாயில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் ‘சர்வதேச ஜூனியர் மாடல் 2022’ சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறுவர்களுக்கான பேஷன் ஷோ போட்டியில் கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் - சாரதாதேவி தம்பதியர். இவர்களது 6 வயது மகன் திஷன், தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் (JMI) பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பாக சிறுவன் திஷன். தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க:  பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இந்தியா, இங்கிலாந்து, இந்தோனேசியா, கென்யா, அமெரிக்கா, துருக்கி, ஈராக் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மேற்கத்திய ஆடை சுற்று, தேசிய பெருமையை பிரதிபலிக்கும் ஆடை சுற்று, கலாச்சார ஆடை சுற்று, திறமை கண்டறியும் சுற்று மற்றும் நேர்காணல் போன்ற சுற்றுகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான "சர்வதேச ஜூனியர் மாடல் 2022" பட்டத்தினை பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கோவை சிறுவன்

பேஷன் ஷோ குறித்து எந்த பின்புலமும் இல்லாத சிறுவன் திஷன் சர்வதேச அளவில் சாதித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த ஆண்டு கோவையை சேர்ந்த சிறுவனே இந்த போட்டியில் முதலிடம் பிடித்த நிலையில், இந்த ஆண்டும் கோவையை சேர்ந்த சிறுவன் திஷன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News