ஹோம் /கோயம்புத்தூர் /

Rozgar Mela: கோவையில் 103 பேருக்கு பணி ஆணை வழங்கிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

Rozgar Mela: கோவையில் 103 பேருக்கு பணி ஆணை வழங்கிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

கோவை

கோவை

Coimbatore Rozgar Mela | பிரதமர் மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு விழாவை இன்று காலை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரி வளாக அரங்கிலும் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

இந்தியா முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் இன்று 103 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான பணி ஆணைகளை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

பிரதமர் மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு விழாவை இன்று காலை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் சுமார் 115 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இந்த நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரி வளாக அரங்கிலும் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

எம்.எல்.ஏ.,க்கள் வானதி ஸ்ரீநிவாசன், சரஸ்வதி தபால்துறை போஸ்மாஸ்டர் ஜெனரல் ஸ்மிதா அயோத்யா, தமிழக சர்கிள் முதன்மை போஸ்ட் மாஸ்டர் செல்வகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பல்வேறு வங்கிகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணிக்கு சேர்ந்த இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளைவழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Modi