ஹோம் /கோயம்புத்தூர் /

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? மலை கிராம மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியர்

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? மலை கிராம மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியர்

Image

Image Source: ShutterStock \ பாம்புக்கடி - வழிகாட்டும் தன்னார்வலர்

Coimbatore Latest News : கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், பாம்புக்கடி ஆராய்ச்சியாளரும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பாம்புக்கடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி, மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வுகள் அடங்கிய கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார். 

இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரையிலும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றனர். உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும், 5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர்.

பெரும்பாலும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், விவசாயிகளும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியாக சமூகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பாம்புக்கடி குறித்து முறையான விழிப்புணர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தேவையாக உள்ளது.

பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வில் அசத்தும் தன்னார்வலர்..

இந்த சூழலில் பாம்புக்கடி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் பாம்புக்கடி ஆராய்ச்சியாளரும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி.

பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வில் அசத்தும் தன்னார்வலர்..

கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விஷப்பாம்புகளின் வகைகள், பாம்புக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் அதற்கான உரிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர், பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்த சூழலில், கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வில் அசத்தும் தன்னார்வலர்..

ஊரகப்பகுதிகளில் பாம்புக்கடி பிரச்சனை அதிகம் என்பதால் சாலைகளே இல்லாத மலைக்கிராமங்களுக்கும் பயணித்து இந்த விழிப்புணர்வை செய்துவருகிறார். மேலும், விஷப்பாம்புகளின் வகைகள், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய மருத்துவ முதலுதவிகள் அடங்கிய புத்தகப்பை, பேனா, பென்சில், பாக்ஸ் மற்றும் டார்ச் லைட் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பாம்புக்கடி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்தியாவை பாம்புக்கடியில் இருந்து பாதுகாப்பான நாடாக உருவாக்குவது தனது பணி என்கிறார் ஆராய்ச்சியாளர் சக்திவேல் வையாபுரி. கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சமூக சேவகராக மலை கிராமங்களில் பணிபுரியும் சதீஷ் என்பவர் சக்திவேல் வையாபுரியின் இந்த சேவைக்கு உதவியுள்ளார்.

சக்திவேல் வையாபுரியை தொடர்பு கொள்ள விரும்பினால் (+44) 7706 868420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

பாம்பு கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை..

  • பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளான நபர், பதற்றம் அடைவதைத் தவிர்த்து, அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். பதற்றம் ஏற்பட்டால், ரத்தம் ஓட்டம் அதிகரித்து, உடல் முழுவதும் வேகமாக பரவி விடும் விஷம். அதேபோல், பாம்பு கடிபட்ட நபர் ஓடுவதோ, நடப்பதோ கூட அபாயத்தை அதிகரிக்கும்.
  • திரைப்படங்களில் பார்ப்பதுபோல, பாம்பு கடித்துவிட்டால், துணியை கிழித்து இறுக்கமாக கட்டுவதை தவிர்ப்பது நல்லது. இறுக்கமாக கட்டுவதால், ரத்த ஓட்டம் பாதித்து, அந்த பகுதியே செயலிழந்து, அழுகிப் போகும் ஆபத்து உண்டு. கடிபட்ட இடத்தை ஓடும் சுத்தமான நீர் கொண்டு சோப்பு போட்டு கழுவுவது சில நேரங்களில் உயிரையேக் காப்பாற்றும். ஏனெனில், பாம்போ, தேளோ சில நேரங்களில் லேசாக தோலில் மட்டுமே சீண்டியிருக்கும். அதனால், சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் ரத்தத்தில் விஷம் கலப்பதை தடுத்து விடலாம்.
  • கடித்தது பாம்போ, தேளோ அதை அடையாளம் கண்டுகொள்வது நல்லது. எந்த பாம்பு கடித்தது என்று தெரிந்துவிட்டால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது எளிது. ஏனெனில், ராஜநாகம், நல்ல பாம்பு போன்றவை கடித்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
  • அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றி விட முடியும்.கட்டுவிரியன் மற்றும் நல்ல பாம்பு கடித்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் கடித்தால் ரத்த நாளங்களை பாதிக்கும்.
  • அதனால், ரத்த உறைதல் தடுக்கப்படும் அல்லது ரத்த சிவப்பணுக்கள் அழிந்துவிடும். அதற்காக, எந்த பாம்பு கடித்தது என்று தெரிந்தால் மட்டுமே, சிகிச்சை அளிக்க முடியும் என்பதெல்லாம் இல்லை.
  • ரத்தம் உறையும் நேரத்தைக் கணக்கிட்டு, அது எந்த வகை பாம்பு என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள் மருத்துவர்கள். பாம்பு கடித்த இடத்திற்கு மிக அருகில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 2 இருந்தால், அரசு மருத்துவமனையை நாடுவதே நல்லது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Snake