ஹோம் /கோயம்புத்தூர் /

ரயில்நிலைய மறுசீரமைப்பு திட்டத்தில் இடம்பெறாத கோவை ரயில் நிலையம்.. அடுத்தது என்ன?

ரயில்நிலைய மறுசீரமைப்பு திட்டத்தில் இடம்பெறாத கோவை ரயில் நிலையம்.. அடுத்தது என்ன?

கோவை

கோவை

Coimbatore Railway Station | தெற்கு ரயில்வே மண்டலத்தில், சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தில், தமிழகத்தில் 10 ரயில் நிலையங்கள் தேர்வாகியுள்ளன. ஆனால், இந்த ரயில் நிலையங்களில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் எந்த ரயில் நிலையமும் இடம் பெறாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள உள்ள 400 ரயில் நிலையங்களை மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்வதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த 400 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக, 199 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர் பெற்ற விவரங்களின்படி 163 ரயில் நிலையங்கள் பட்டியலும், அந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்தின் தற்போதைய நிலையும் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

அதன்படி, தென்னிந்தியாவில் தமிழகத்தில் 10 ரயில் நிலையங்களும், கேரளாவில் 8 ரயில் நிலையங்களும், ஆந்திராவில் 8 ரயில் நிலையங்களும், தெலங்கானாவில் 5 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் 4 ரயில் நிலையங்களும் என 35 நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில், தெற்கு 4, வடக்கு, 4, கிழக்கு, 2 என, 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய எந்த ஒரு ரயில் நிலையமும் தேர்வு செய்யப்படவில்லை.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

மேற்கு மண்டலத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, ஓசூர் என பல்வேறு மாநகராட்சிகள் இருந்தும், ஒன்றுமே தேர்வு செய்யப்படவில்லை.

தெற்கு ரயில்வே மண்டலத்தில், சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை விடவும் கோவை அதிக வருவாய் ஈட்டித்தருகிறது.

தொழில் மாவட்டமான கோவையில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இயந்திர உதிரிபாகங்கள் முதல், விவசாய பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

இதனிடையே ரயில் நிலையத்தை மேம்படுத்தி, கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கோவை ரயில்வே போராட்டக்குழுவினர் முன்னதாகவே கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து நியூஸ் 18 செய்தித்தளத்திலும் விரிவான செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள ரயில் நிலையங்கள் பட்டியலில் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்கள் இடம்பெறாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதற்கட்டமாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள, 199 ரயில் நிலையங்களில் இன்னும், 36 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ள சூழலில், அதில் கோவை உட்பட மேற்கு மண்டலத்திலுள்ள ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News