கோவையில் கம்பங்கூழ் விற்பனை செய்து வரும் 'பவர் ஹவுஸ்' பாண்டி என்பவரது கடையில் கோடை காலம் மட்டுமில்லாமல் எந்த நேரமும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இவரின் கடையில் அப்படி என்ன ஸ்பெஷல்.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும், தமிழகத்தை வெப்பம் விடுவதாய் இல்லை. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்தது. ஆனால் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் இளநீர், நுங்கு, கம்பங்கூழ் மற்றும் மோர் விற்பனை செய்யும் கடைகளில் குவிந்து வருகின்றனர்
இதனிடையே டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சாலையோரம் அமைந்துள்ள கம்பங்கூழ் விற்பனை செய்யும் கடையை சூழ்ந்து கொண்டு நின்றனர் பொதுமக்கள். ஊரெங்கும் கம்பங்கூழ் கடை இருக்கையில் இங்கு மட்டும் என்ன ஸ்பெஷன் என்று தெரிந்து கொள்ள அந்த கடைக்கு சென்றோம்.
கடைந்து வைத்த கம்பு, கெட்டி தயிரை கொண்டு வாடிக்கையாளர்கள் கண் முன்னே கம்பங்கூழை தயார் செய்கிறார் 'பவர் ஹவுஸ்' பாண்டி. கடந்த 20 ஆண்டுகளாக கடையை நடத்தி வருகிறார் இவர்.
"பல கடைகள் இருந்தாலும் பாண்டி அண்ணன் கடையில் கம்பங்கூழ் சுவையே தனி" என்கின்றனர் வாடிக்கையாளர்கள். பொதுவாக சாலையோரம் உள்ள தள்ளு வண்டி கடைகளில் கம்பங்கூழுக்கு ஒரு சிறிய தட்டி சைட்டிஷ் கொடுப்பார்கள். ஆனால் பாண்டியின் சைட்டிஷ்-க்கு என ஒரு தனி தள்ளுவண்டியை நிறுத்தி முழுவதும் தின்பண்டங்களை நிறைத்து வைத்திருக்கிறார்.
ஒரு டம்ளர் கூழ் மாற்றும் அன் லிமிட்டெட் சைட்டிஷ் எடுத்துக் கொண்டால் மதியே உணவே தேவையில்லை என்கின்றனர் வாடிக்கையாளர்கள். கம்பங்கூழ் மட்டுமல்லாது, கேப்பைக்கூழ், ராகி, கேப்பை மற்றும் சோழக் கூழும், மோரும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் சீசன் மட்டுமல்லாது அனைத்து நேரத்திலும் 'பவர் ஹவுஸ்' பாண்டி கடையை நடத்தி வருகிறார்.
கூழ் வகைகள் 20 ரூபாய்க்கும், மோர் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பார்சலுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உடனே புறப்பட்டு குழு குழு கூழும், ருசியான சைட் டிஷ்களையும் ஒரு கை பாத்துட்டு வாங்க.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Food18, Local News