ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி.. இங்க என்ன ஸ்பெஷல்?

கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி.. இங்க என்ன ஸ்பெஷல்?

கோவை

கோவை - போலீஸ் மியூசியம்

Coimbatore Police Museum | கோவை ரயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு காவல்துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ளது. இந்த கிளப்பில் போலீஸ் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கோவை போலீஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு காவல்துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ளது. இந்த கிளப்பில் போலீஸ் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் காலம் முதல் தற்போது வரை காவலர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், விசாரணைக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், காவலர்களின் உடைகள், சந்தனக்கடத்தல் வீரப்பனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், கடற்புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக்கப்பல் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

இந்த அருங்காட்சியகத்தில் கடந்த சில மாதங்களாக புனரமைக்கப்பட்டு வந்தது. இதனால், அருங்காட்சியகத்தை பார்வையிட தற்காலிகமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் பேண்ட், போலீஸ் நாய் கண்காட்சி ஆகியவை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் பார்வையாளர்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 மட்டும் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

இதில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பார்வையாளர்கள் கட்டணம் இலவசம் . அரசு சாரா மற்ற தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பார்வையாளர்கள் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அருங்காட்சியகத்தின் முழு பயனைப் பெறக்கூடிய வகையில் இலவச "வழிகாட்டு பயணம்" கீழ்க்கண்ட நேரங்களில் நடத்தப்படும்:-

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை. மதியம் 12.30 மணி முதல் 01.30 மணி வரை. மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரை. மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை நடத்தப்படுகிறது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News