Home /coimbatore /

கோவைக்கு வரும் மெட்ரோ ரயில் எப்படி இருக்க வேண்டும்..? - மக்கள் கருத்து.!

கோவைக்கு வரும் மெட்ரோ ரயில் எப்படி இருக்க வேண்டும்..? - மக்கள் கருத்து.!

கோவை

கோவை மெட்ரோ ரயில்

Coimbatore Metro Train : கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து கோவை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். அதைத் தொடர்ந்து அந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, சிறுவாணி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மொத்தம் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக உக்கடத்திலிருந்து அவினாசி சாலை கணியூர் வரையிலும், சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) சிஸ்டிரா அண்டு ரைட்ஸ் நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைகள் ஏற்கனவே உள்ள சாலைகளில் தான் அமைக்கப்பட உள்ளது. அந்த சாலைகள் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு ஏற்ற வகையில் அகலமாக உள்ளனவா? நிலம் போதவில்லை என்றால் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுமா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மெட்ரோ ரயில்


இந்த திட்டம் எளிய மக்கள் சுலபமாக மெட்ரோவில் பயணிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதும், கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுமே கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.


கோவை மெட்ரோ ரயில் திட்டம்


மெட்ரோ ரயில் திட்டத்தால் மக்களுக்கு சவுகரிமாகவும் பயன் உள்ளதாகவும் இருக்கும். வாகன நெரிசல் குறைவதோடு, புகை மாசு ஏற்படுவதும் குறைவாகும்.

 

ஷைணி, கோவை


முக்கியமான பகுதிகள் மட்டுமல்லாது, கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளையும் அடையும் வகையில் மெட்ரோ ரயில் அமைய வேண்டும்.

ராஜசேகரன், கோவை


பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் சென்றால் குறுகிய தூரத்தை கூட அதிக நேரம் பயணம் சென்று சேருவதாக இருக்கிறது. எனவே கோவைக்கு வரவிருக்கும் மெட்ரோ ரயில் வரப்பிரசாதம் தான். என பல்வேறு கருத்துகளை கோவை மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிரஞ்சனா, கோவை


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Metro Rail

அடுத்த செய்தி