ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை தேவை.. மழையால் விபரீதம் ஏற்படும் முன் மாநகராட்சி கவனிக்குமா?

கோவையில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை தேவை.. மழையால் விபரீதம் ஏற்படும் முன் மாநகராட்சி கவனிக்குமா?

கோவை

கோவை

Coimbatore Today News | கோவை சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிக்கும் வாகனங்கள் மீதும் மரக்கிளைகள் முறிந்து விழுவதால் வாகனங்கள் சேதமடைகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

மழைக்காலம் தொடங்கிவிடும் முன்னர் கோவையில் சேதமடைந்த மரக்கிளைகளை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகள் சேதமடைந்துள்ளன.

அவ்வாறு சேதமடைந்த கிளைகள், திடீரென சாலைகளில் விழுகின்றன. இதனால் பல நேரங்களில் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனையால் கடந்த காலங்களில் கோவையில் மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

மேலும், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிக்கும் வாகனங்கள் மீதும் மரக்கிளைகள் முறிந்து விழுவதால் வாகனங்கள் சேதமடைகின்றன. இதனிடையே சேதமடைந்த மரக்கிளைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக வெட்டி அகற்ற துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் இந்த பணிகள் துவங்கும் என்றும்தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News