ஹோம் /கோயம்புத்தூர் /

Coimbatore News : லட்சுமி மில்ஸ் சிக்னலில் ஒலிக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்.. கோவை போக்குவரத்து போலீசாரின் புதுமை முயற்சி..

Coimbatore News : லட்சுமி மில்ஸ் சிக்னலில் ஒலிக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்.. கோவை போக்குவரத்து போலீசாரின் புதுமை முயற்சி..

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் லட்சுமி மில்ஸ் சிக்னல்

Coimbatore Latest News : லட்சுமி மில்ஸ் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையோடு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கோவை மாநகர போலீசார் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகரில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு மிக முக்கியமான ஒரு சந்திப்பு. அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து கோவையின் நான்கு திசைகளுக்கும் பயணம் செய்யலாம். எப்போதும் வாகன போக்குவரத்து இந்த இடத்தில் அதிகமாக இருப்பதால் லட்சுமி மில்ஸ் சிக்னல் கோவை மாநகரில் பெரிய போக்குவரத்து சிக்னலாக உள்ளது.

லட்சுமி மில்ஸ் போக்குவரத்து சிக்னலில் கோவை மாநகர போலீசார் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையோடு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கு ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒலிபெருக்கிகள்

இந்த ஒலிபெருகிகள் மூலமாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் குறித்தும், சாலை விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

லட்சுமி மில்ஸ் சிக்னல்

மேலும், விதிமுறைகளை ஒலிபரப்புவதற்கு இடையே இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் மெலடி பாடல்களின் கரோக்கிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சாலையில் சிக்னலில் நிற்கும் போது இந்த மெல்லிசைகள் ஒருவித அமைதியைத் தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

லட்சுமி மில்ஸ் சிக்னல்

இந்த சிக்னலில் பாதசாரிகள் சாலையை கடப்பதில் சிரமம் நீடித்து வந்த நிலையில், பாதசாரிகள் சாலையை எளிதில் கடக்கும் விதமாக அவர்களுக்காக பிரத்தியேக சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதசாரிகளை வழிமுறைப்படுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சோதனை அடிப்படையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து கோவை மாநகரின் அனைத்து சிக்னல்களிலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News