ஹோம் /கோயம்புத்தூர் /

மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம்..

மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம்..

கோவை

கோவை குற்றாலம்

Kovai Kutralam | இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை மாவட்டத்தின் பிரதான சுற்றலா தலங்களில் கோவை குற்றாலம் அருவியும் ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

அருவியில் குளித்து மகிழ்ந்தும், இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் தனி வாகனத்தில் அழைத்து செல்லப்படுவார்கள்.  அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோவை குற்றாலத்தில் அவ்வப்போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை வனத்துறையினர் கண்காணித்து நீரின் வரத்து அதிகரித்தால் சுற்றலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும்.

மேலும் படிக்க:  1,000 பேருக்கு வேலை.. கோவை டைடல் பார்க்ல தொடங்கியாச்சு Quintessence நிறுவனம்.. 

கடந்த சில மாதங்களாக கோவை குற்றாலத்தில் அவ்வப்போது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது எல்லாம் சுற்றுலா பயினிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு கடந்த ஜூலை மாதம் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதமாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.

மேலும் படிக்க:  கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

தொடர் விடுமுறை:

இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனை அடுத்து கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அருவி நேரம்:

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை 10 மணிக்கு அனுமதிச் சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மதியம் 1 மணிக்குள் வெளியேற வேண்டும். இந்நிலையில் நேற்று கோவை குற்றலாம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 375 பெரியவர்களும், 30 குழந்தைகளும் என மொத்தம், 405 சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Tourist spots