Home /coimbatore /

கோவையில் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய ஓணம் பண்டிகை..!

கோவையில் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய ஓணம் பண்டிகை..!

கோவை

கோவை - ஓணம் கொண்டாட்டம்

Coimbatore Onam Celebration | கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டம் கேரள மாநிலத்திற்கு அருகில் அமைந்திருப்பதால் இங்கு கேரளாவை சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கோவையில் உள்ள கல்லூரிகளில் கேரளாவில் இருந்து வந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கோவையின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனிடையே கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் இன்று (8ம் தேதி) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரில் மாணவர்கள் இணைந்து ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.

மாணவிகளின் நடனம்


இந்த விழாவை கல்லூரி முதல்வர் அகிலா தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவிகள் கல்லுாரி வளாகத்தில் பிரமாண்ட அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர். மாணவர்கள் மகாபலி சக்கரவர்த்தி மன்னர் வேடமணிந்து வந்தனர்.

மகாபலி சக்கரவர்த்தி மன்னர் வேடமிட்ட மாணவர்


ஓணத்தை வரவேற்கும் விதமாக பெண்கள் திருவாதிரை குழு நடனமாடியும், செண்டை மேளம் இசைத்தும், ஓணம் பாடல்கள் பாடியும் ஓணம் விழாவை கொண்டாடினர். மேலும், கேரளாவின் பாரம்பரிய உணவு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து. இது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

ஓணம் கொண்டாட்டம்


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Onam

அடுத்த செய்தி