Home /coimbatore /

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை அள்ளிய கோவை குட்டீஸ்.. தேசிய போட்டிக்கு தகுதி...

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை அள்ளிய கோவை குட்டீஸ்.. தேசிய போட்டிக்கு தகுதி...

கோவை

கோவை

Coimbatore Latest News : தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கோவையை சேர்ந்த குட்டி சுட்டீஸ் 19 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழ்நாடு மாநில அளவிலான டேக்வாண்டோ கியோருகி பூம்சே சாம்பியன்ஷிப் போட்டி தருமபுரி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 3 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் கோவையிலிருந்தும் 3.5 வயது முதலான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று வந்துள்ளனர்.  கடந்த ஒராண்டாக இந்த போட்டிக்காக பயிற்சி பெற்று தற்போது வெற்றி வாகை சூடிய இந்த சுட்டிகளுக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து டேக்வாண்டோ பயிற்சியாளர் பிரதீப்குமார் கூறுகையில் "எங்கள் அணியில் இருந்து 15 போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர். கொரிய தற்காப்பு கலையான இது ஒலிம்பிக் போட்டியில் உள்ளது. 3.5 வயது முதல் 21 வயது வரையிலான மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த பதக்கங்களை வென்றதன் மூலமாக மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Sports

அடுத்த செய்தி