Home /coimbatore /

India Book of Records-ல் இடம் பிடித்த 5 வயது சாதனை சிறுமி.. கோவைக்கு இவரால் பெருமை..

India Book of Records-ல் இடம் பிடித்த 5 வயது சாதனை சிறுமி.. கோவைக்கு இவரால் பெருமை..

கோவை

கோவை சாதனை சிறுமி

Coimbatore Latest News : India Book of Records (இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்) சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவையை சேர்ந்த 5 வயதாகும் மாநகராட்சி பள்ளி மாணவி குறித்த தொகுப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - சாலினி தம்பதியரின் 5 வயது மகள் இனியா.  இவர் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். அபார ஞாபகசக்தி திறன் கொண்ட இந்த சிறுமி, அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், நிறங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை மிகச்சரியாக கூறுகிறார்.

10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 ரைம்ஸ் (Rhymes) பாடல்களை பாடி அசத்தியுள்ளார் இனியா. இவரது அபார ஞாபகத்திறனை அங்கீகரித்துள்ளது இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ். சிறுமியின் சாதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுமி இனியா


தனது பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் அளித்த பயிற்சி காரணமாக அனைத்து பாடல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்ததாகவும், மருத்துவராவது தனது ஆசை என்றும் மழலை குரலில் கூறுகிறார் இனியா.

சிறுமி இனியா


மாநகராட்சி பள்ளியில் படிக்கும் சிறுமி 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கான 50 பாடல்களை கூறி அசத்தி  கோவை மக்களை பெருமையடைய செய்துள்ளார். வருங்காலத்தில் இவர் கோவைக்கு பெருமை தேடித்தருவார் என்பதில் ஐயமில்லை..

சிறுமி இனியா


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிறுமி இனியாவின் சாதனையை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி